search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்ஏ கேலக்சி"

    அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் சோஸரின் சிறந்த புதுமுக வீரராக இப்ராஹிமோவிச் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரூனே 2-வது இடத்தை பிடித்துள்ளார். #MLS #LAGalaxy
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, லீக் 1, செரி ஏ போன்று அமெரிக்காவில் மேஜர் லீக் சோஸர் கால்பந்து லீக் நடத்தப்பட்டு வருகிறது. ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் லீக் தொடரில் விளையாடும் பிரபலமான வீரர்கள், 30 வயதிற்குப் பிறகு ஆட்டத்திறன் குறையும்போது மேஜர் லீக் சோஸரில் பங்கேற்பது இயல்பு.

    அப்படித்தான் இந்த ஆண்டு இப்ராஹிமோவிச், ரூனே ஆகியோர் மேஜர் லீக்கில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். இதில் இப்ராஹிமோவிச் 22 கோல்கள் அடித்துள்ளார். 20 கோல் அடிக்க உதவி புரிந்துள்ளார். இதனால் சிறந்த புதுமுக வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



    எல்ஏ கேலக்சி அணிக்காக விளையாடி வரும் இப்ராஹிமோவிச்சிற்கு 36.36 சதவீத வாக்குகளும், டிசி யுனைடெட் அணிக்காக விளையாடி வரும் ரூனே 32.25 சதவீத வாக்குகளம் பெற்றனர்.
    அமெரிக்காவில் நடைபெற்று வரும் மெகா லீக் சோஸர் லீக்கில் ஸ்வீடன் வீரர் இப்ராஹிமோவிச் ஹாட்ரிக் கோல் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். #MLS
    அமெரிக்காவில் மெகா லீக் சோஸர் என்ற பெயரில் கால்பந்து லீக் தொடர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பா நாடுகளில் நடத்தப்படும் கால்பந்து லீக்கில் நீண்ட காலம் விளையாடிய பின்னர், சுமார் 30 வயதிற்குப் பின் முன்னணி வீரர்கள் மெகா லீக் சோஸரில் விளையாடுவது வழக்கம்.

    அந்த வகையில் ஸ்வீடன் நாட்டின் தலைசிறந்த வீரர் ஸ்லாடன் இப்ராஹிமோவிச் எல்ஏ கேலக்சி அணிக்காக விளையாடி வருகிறார். இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் எல்ஏ கேலக்சி ஓர்லாண்டோ சிட்டியை எதிர்கொண்டது.



    முதல் 54 நிமிடத்தில் ஓர்லாண்டோ சிட்டி 3-2 என முன்னிலைப் பெற்றிருந்தது. எல்ஏ கேலக்சி அணிக்காக இப்ராஹிமோவிச் 47-வது நிமிடத்தில் கோல் அடித்திருந்தார். அதன்பின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இவர் 67-வது நிமிடத்திலும், 71-வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார். இதன்மூலம் எல்ஏ கேலக்சி 4-3 என வெற்றி பெற்றது.



    எல்ஏ கேலக்சி அணிக்காக இப்ராஹிமோவிச் 17 போட்டிகளில் விளையாடி 15 கோல்கள் அடித்துள்ளார்.
    ×